”சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும். (அல்குர்ஆன் 17:81)

கடனும் இன்றைய முஸ்லிம்களும்

அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் – ஜூம்ஆ குத்பா பேருரை  காலம் :  22-07-2016  தலைப்பு: கடனும் இன்றைய முஸ்லிம்களும்  வழங்குபவர்: அஷ்ஷைக் நியாஸ் ஸித்தீக் (சிராஜி)

கடலில் பிர்அவ்னின் உடலுக்கு நடந்தது என்ன?

அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் – விசேட பயான் நிகழ்ச்சி  காலம் :  14-07-2016  தலைப்பு: கடலில் பிர்அவ்னின் உடலுக்கு நடந்தது என்ன?  வழங்குபவர்: அஷ்ஷைக் யூனுஸ் தப்ரீஸ் (சத்திய குரல் ஆசிரியர்)

பிரார்தனை ஓர் ஆயுதம்

அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் – ஜூம்ஆ குத்பா பேருரை  காலம் :  15-07-2016  தலைப்பு: பிரார்தனை ஓர் ஆயுதம்  வழங்குபவர்: அஷ்ஷைக் உஸ்மான் தௌஹீதி

கடலில் பிர்அவுனின் உடலுக்கு நடந்தது என்ன ?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை

பிர்அவ்ன்சமீபகாலமாக மார்க்கத்தின் பெயரால் பல ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்து வந்தவர்கள், தற்போது பல குர்ஆன் வசனங்களுக்கு தவறான கருத்துகளை கூறி வருகின்றனர். அவற்றில் 10 -92 ம் வசனத்திற்கு கொடுக்கும் தவறான விளக்கமாகும்.

முதலில் நேரடியான குர்ஆன் வசனத்தின் பொருளை கவனியுங்கள்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன்னை உன் உடலோடு பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).(10- 92)

இந்த வசனத்தில் உன்னையும், உன் உடலையும் பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறுகிறான். உன்னையும், உனது உடலையும் என்றால் உயிரோடு காப்பாற்றப்பட்டதை தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே பிர்அவுன் கடலில் வைத்து சாகடிக்கப்படவில்லை, மாறாக அந்த நேரத்தில் அல்லாஹ் அவனை காப்பாற்றி விட்டான் என்று பிஜே எழுதிய விளக்கத்தை சையது இப்றாஹீம் எடுத்துக் காட்டி அதற்காக ஒர் உதாரணத்தையும் எடுத்துச் சொல்கிறார். ஒரு மனிதரைப் பார்த்து உன்னை உனது உடலோடு பாதுகாப்பேன் என்று ஒருவர் கூறுகிறார் ,அதே நேரம் சிலர் வந்து அவரை வெட்டி கொலை செய்து விடுகிறார்கள், என்னப்பா உடலோடு அவரை பாதுகாப்பதாக சொன்னாய் ? ஆனால் அவர் மரணித்து கிடக்கிறார் என்று சொன்னால் சரியாகி விடுமா ? அது போல உனது உடலோடு பாதுகாப்போம் என்று இறைவன் சொல்வது பிர்அவுனை உயிரோடு காப்பற்றியதையே குறிக்கிறது என்று கூறுகிறார்.? Continue reading

1 2 3 48